/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
2 இன்ஸ்பெக்டர்களுக்கு டி.எஸ்.பி., பதவி உயர்வு
/
2 இன்ஸ்பெக்டர்களுக்கு டி.எஸ்.பி., பதவி உயர்வு
ADDED : ஜன 30, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் மாநகர போலீசில், இரண்டு இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்றனர்.
தமிழக முழுவதும், 83 இன்ஸ்பெக்டர்களுக்கு, டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு வழங்கப்பட்டு நேற்று ஆணை வெளியானது. இதன் மூலமாக, திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிச்சையா, கன்னியாகுமரி மாவட்ட குற்ற ஆவண காப்பகத்துக்கும், அனுப்பர்பாளையம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சரவண ரவி, மதுரைக்கும் பதவி உயர்வு செய்யப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு அதிவிரைவு படை பிரிவு இன்ஸ்பெக்டர் ஜான், கே.வி.ஆர்., நகர் உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.