/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., கால்வாயில் மூழ்கி 2 பேர் பலி
/
பி.ஏ.பி., கால்வாயில் மூழ்கி 2 பேர் பலி
ADDED : மே 12, 2025 11:42 PM
உடுமலை : கோவை மாவட்டம், மண்ணுாரை சேர்ந்தவர் விவேகானந்தன், 36. இவரது மனைவி கவுசல்யா, 32, தம்பி கார்த்திக்குமார், 34, அவரது மனைவி கனிமொழி மற்றும் குழந்தைகளுடன், உடுமலை அருகே திருமூர்த்தி மலைக்கு சுற்றுலா வந்துள்ளார்.
திருமூர்த்தி நகர் அருகே பி.ஏ.பி., பிரதான கால்வாயில் குளித்தனர். அப்போது, அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இதைப் பார்த்த குடும்பத்தினர் கால்வாயில் குதித்து குழந்தையை காப்பாற்ற முயன்றனர். இதில் அருகில் இருந்தோர் குழந்தையை மீட்டனர். ஆனால், கார்த்திக்குமார், கவுசல்யா தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
சிறிது நேரத்தில் கால்வாய் ஓரத்தில், இருவரது உடல்களும் ஒதுங்கின. தளி போலீசார் விசாரிக்கின்றனர்.