/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருட்டு வழக்கில் 2 பேருக்கு சிறை
/
திருட்டு வழக்கில் 2 பேருக்கு சிறை
ADDED : நவ 11, 2025 12:27 AM
திருப்பூர்: திருட்டு, வழிப்பறி வழக்கில், இருவருக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கொங்கு நகர் பகுதியில் டூவீலரை திருடிய வழக்கில், வல்லரசு, கணேஷ், ஷாஜகான் ஆகியோர் கடந்த, 2023ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். ஜாமினில் வந்து தலைமறைவானவர்கள் மீது பிடிவாரண்ட் விதிக்கப்பட்ட நிலையில் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கு விசாரணை திருப்பூர் ஜே.எம்.எண்:1 கோர்ட்டில் நடந்தது. குற்றவாளிகளுக்கு, மாஜிஸ்திரேட் செந்தில்ராஜா, தலா ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மற்றொரு வழிப்பறி வழக்கில், கணேஷூக்கு, இரண்டு ஆண்டு தண்டனை வழங்கப்பட்டது.
திருப்பூர், கொங்கு நகரில், ஒரு கடையில் பணியாற்றிய சிலம்பரசன் என்பவர், 2023ல் பணம் திருடினார். இவ்வழக்கில், இவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இவ்விரு, வழக்குகளில், அரசு தரப்பில், வக்கீல் கவிதா ஆஜாரானார்.

