/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை; உறுதிப்படுத்தியது நீதிமன்றம்
/
தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை; உறுதிப்படுத்தியது நீதிமன்றம்
தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை; உறுதிப்படுத்தியது நீதிமன்றம்
தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை; உறுதிப்படுத்தியது நீதிமன்றம்
ADDED : செப் 07, 2025 10:38 PM
திருப்பூர்; பெரியாண்டிபாளையம் காமராஜ் காலனியைச் சேர்ந்தவர் தாஸ், 47. கூலி தொழிலாளி. கடந்தாண்டு கல்லுாரி மாணவி ஒருவரிடம் அத்துமீறி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருப்பூர் தெற்கு மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தாைஸக் கைது செய்தனர். வழக்கு விசாரணை கூடுதல் மகிளா கோர்ட்டில் நடந்தது. கடந்த பிப்., மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட தாஸூக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதன் மீது மேல் முறையீடு செய்து, எஸ்.சி., - எஸ்.டி., சிறப்பு அமர்வு கோர்ட்டில் தாஸ் மனு அளித்தார். மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ் அதை தள்ளுபடி செய்தும், மகிளா கோர்ட் விதித்த தண்டனையை உறுதி செய்தும் உத்தர விட்டார். அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் விவேகானந்தம் ஆஜரானார்.