/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கஞ்சா - குட்கா கடத்திய 2 வாலிபர்கள் கைது
/
கஞ்சா - குட்கா கடத்திய 2 வாலிபர்கள் கைது
ADDED : ஜூலை 20, 2025 01:30 AM
திருப்பூர் : கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்து, 5 கிலோ கஞ்சா மற்றும் 8 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
வடக்கு போலீசார் நடத்திய சோதனையின் போது, திருப்பூர் ரயில்வே பீடர் ரோட்டில் சந்தேகப்படும் வகையில் நடமாடிய இருவரை பிடித்து விசாரித்தனர்.
அவர்களை சோதனை செய்த போது அவர்களிடம், 5 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களும், 8 கிலோ எடையிலான புகையிலை பொருள் பாக்கெட்களும் இருந்தன. பாலக்காட்டைச் சேர்ந்த ஜிஷ்னு, 21 மற்றும் பீகாரைச் சேர்ந்த சசிகுமார், 19 என்பது, கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை விற்றது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, கஞ்சா, புகையிலை பொருட்கள் மற்றும் இரு மொபைல் போன்களையும் பறிமுதல் செய்தனர்.