/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலவச கண் சிகிச்சை முகாம்; 200 பேர் பயன்பெற்றனர்
/
இலவச கண் சிகிச்சை முகாம்; 200 பேர் பயன்பெற்றனர்
ADDED : செப் 22, 2025 12:24 AM

பல்லடம்; பல்லடம் லயன்ஸ் சங்கம், ஈகை அறக்கட்டளை, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை, சின்ன வடுகபாளையம் அரசு துவக்க பள்ளி வளாகத்தில் நடத்தின.
லயன்ஸ் சங்க தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். செயலாளர் விஷாலினி குமார், பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி, வட்டார தலைவர் ராமபிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று கண் பரிசோதனை செய்து கொண்டனர். இதில், 40 பேருக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
பரிசோதனை அடிப்படையில், 25 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். பல்லடம் நகராட்சி பா.ஜ., வார்டு கவுன்சிலர் சசிரேகா, சின்னுாரை சேர்ந்த தனபாலன் ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்தனர்.