தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மக்கள் தொகை கணக்கெடுப்பில் 2,000 களப்ப-ணியாளர்

மக்கள் தொகை கணக்கெடுப்பில் 2,000 களப்ப-ணியாளர்

மக்கள் தொகை கணக்கெடுப்பில் 2,000 களப்ப-ணியாளர்


ADDED : ஜூன் 16, 2026 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 03:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்; மத்திய அரசின் நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முதற்கட்டப் பணிகள் திருப்பூர் மாவட்டத்தில் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாநகராட்சி ஒருங்கி-ணைப்பாளர்களுக்கான 3 நாள் பயிற்சி நேற்று தொடங்கியது.

மாநகராட்சி கமிஷனர் அமித் தலைமையில் நடந்த இப்பயிற்சியில், துணை கமிஷனர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்-பட்டுள்ள 50 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கலந்து-கொண்டனர். பொதுமக்களை அணுகும் முறை, படிவங்களை நிரப்புவது மற்றும் விவரங்களைப் பதிவேற்றம் செய்வது குறித்து இதில் விளக்கம் அளிக்கப்பட்டது.களப் பணியாளர்கள்: திருப்பூரின் 60 வார்டுகளில் உள்ள 14 லட்சம் மக்களிடம் இக்கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 200 குடும்பங்கள் அல்லது 800 பேருக்கு ஒரு கள அலுவலர் வீதம், மொத்தம் 2,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இப்ப-ணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பயிற்சித் திட்டம்: தற்போது பயிற்சி பெற்றுள்ள 50 ஒருங்கிணைப்பாளர்கள், தங்களின் கீழுள்ள 2,000 களப் பணியாளர்களுக்கு அடுத்ததாகப் பயிற்சி அளிப்பார்கள். காலக்கெடு: இப்பயிற்சிப் பணிகள் அனைத்தும் ஜூலை 15 முதல் 31-க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்-சியாக, வரும் ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி முழுவீச்சில் தொடங்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us