/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவ, மாணவியருக்காக 2.06 லட்சம் சீருடைகள்
/
மாணவ, மாணவியருக்காக 2.06 லட்சம் சீருடைகள்
ADDED : ஜூன் 06, 2025 06:17 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்க, 2.06 லட்சம் சீருடை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாடநுால் மட்டுமின்றி, புத்தகப்பை, கணித உபகரணம், காலனி, பென்சில், வரைபடம், சீருடை உள்ளிட்ட, 14 வகை இலவச பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, பள்ளி திறப்புக்கு பின் மாணவ, மாணவியர் எண்ணிக்கையை கணக்கிட்டு, 2.06 லட்சம் சீருடைகள் தருவிக்கப்பட்டுள்ளன.
இடுவாய் அரசு மேல்நிலைப்பள்ளி குடோனில் இருந்து, தாலுகா வாரியாக பள்ளிகளுக்கு இவை அனுப்பி வைக்கப்பட்டு, மாணவ, மாணவியருக்கு வினியோகம் செய்யும் பணி துவங்கியுள்ளது.
ஒன்று முதல் ஆறு மற்றும், ஒன்பதாம் வகுப்பு வரை நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்க, மாவட்டத்தில், 13 வட்டார கல்வி அலுவலகங்களுக்கும், சீருடைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் எடுத்துச் செல்வர். பள்ளிகல்வித்துறை வாகனம் மூலமும் சீருடைகள் எடுத்துச் செல்லப்படுகிறது.
மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,' முதல் கட்ட தேவைகளுக்கு சீருடை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அட்மிஷன் நடந்து வருகிறது.
துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர் பள்ளிக்கு வரும் போது எண்ணிக்கை அதிகரிக்கும். அதற்கேற்ப கூடுதல் சீருடை இம்மாத இறுதிக்குள் தருவிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்,' என்றனர்.