/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிக்கண்ணா அரசு கல்லுாரிக்கு பெருமை சேர்த்த 21 மாணவர்கள்
/
சிக்கண்ணா அரசு கல்லுாரிக்கு பெருமை சேர்த்த 21 மாணவர்கள்
சிக்கண்ணா அரசு கல்லுாரிக்கு பெருமை சேர்த்த 21 மாணவர்கள்
சிக்கண்ணா அரசு கல்லுாரிக்கு பெருமை சேர்த்த 21 மாணவர்கள்
ADDED : செப் 22, 2024 04:10 AM

திருப்பூர், : பல்கலை தேர்வு முடிவில், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி ஒரு மாணவர் தங்கம் வென்று முதலிடம் பெற்றுள்ளார்; இக்கல்லுாரி, 21 ரேங்க் பெற்று அசத்தியுள்ளது.
கோவை பாரதியார் பல்கலை தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், திருப்பூர், காலேஜ் ரோடு, சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி மாணவர், மாணவியர் ஒரு தங்கம் உட்பட, 21 சிறப்பிடங்களை வென்றுள்ளனர்.
முதுகலை பிரிவு
முதலிடம், முகமதுபஹீம், இரண்டாமிடம் ஸ்ரீ காந்த், மூன்றாமிடம் யாதவி, ஆறாம் இடம் கஸ்துாரி, எட்டாம் இடம் வீராமகாஜோதி, ஒன்பதாம் இடம் அரவிந்தன் (முதுநிலை சர்வதேச வணிகவியல்) இப்பாடப்பிரிவை பொறுத்த வரை, ஒன்பது தரவரிசை பட்டியலில் சிக்கண்ணா கல்லுாரியை சேர்ந்தவர்களே ஆறு பேர் இடம் பெற்றுள்ளனர்.
இரண்டாமிடம் ஸ்ரீ விஜயஷாலினி, மூன்றாமிடம் சந்தியா, ஐந்தாமிடம் ஸ்வேதா (ஆடை வடிவமைப்பு நாகரிகம்), மூன்றாமிடம் அரவிந்த், நான்காமிடம் அதிஷ்ராஜா (வேதியியல் பாடப்பிரிவு) ஐந்தாமிடம், பிரியதர்ஷினி (இயற்பியல்) ஏழாமிடம் சபேன், பத்தாமிடம் சக்திவேல் (விலங்கியல்), மோதி (கணினி அறிவியல்).
இளங்கலை பிரிவு
மூன்றாமிடம் தனுஷ், ஏழாமிடம் முகமதுரீபாஸ், பத்தாமிடம் பர்ஷனாபர்வீன் (இளங்கலை சர்வதேச வணிகவியல்), ஐந்தாமிடம் திவ்யா, ஆறாம் இடம் விசித்ரா (இளங்கலை விலங்கியல்) ஒன்பதாமிடம் அஷ்வின் (இளங்கலை தமிழ்)
பல்கலை தேர்வில் வெற்றி பெற்று கல்லுாரிக்கு பெருமை சேர்ந்த மாணவ, மாணவியரை கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், சர்வதேச வணிகவியல் துறைத் தலைவர் மல்லேஸ்வரன், விலங்கியல் துறைத் தலைவர் மார்க்கரெட், ஆடை வடிவமைப்பு நாகரிகம் துறைத்தலைவர் கற்பகம் சின்னம்மாள், தமிழ்த் துறைத் தலைவர் பாலசுப்பிரமணியன், வேதியியல் துறைத் தலைவர் கார்த்திகேயன், இயற்பியல் துறை அரவிந்தன், கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் இரா.சங்கர், கல்லுாரி ஆட்சிக்குழுவினர், அனைத்துத் துறைப் பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத்தினர் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, -மாணவியரை வாழ்த்திப் பாராட்டினர்.