sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பதிவு செய்த வெளிமாநில தொழிலாளர்கள் 2,19,349 பேர்! தொழிலாளர் துறை தொடர் விழிப்புணர்வு

/

பதிவு செய்த வெளிமாநில தொழிலாளர்கள் 2,19,349 பேர்! தொழிலாளர் துறை தொடர் விழிப்புணர்வு

பதிவு செய்த வெளிமாநில தொழிலாளர்கள் 2,19,349 பேர்! தொழிலாளர் துறை தொடர் விழிப்புணர்வு

பதிவு செய்த வெளிமாநில தொழிலாளர்கள் 2,19,349 பேர்! தொழிலாளர் துறை தொடர் விழிப்புணர்வு


ADDED : நவ 22, 2025 05:44 AM

Google News

ADDED : நவ 22, 2025 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: மாநிலம் முழுவதும் வெளிமாநில தொழிலாளர் விவரங்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது; திருப்பூரில் மட்டும், இரண்டு லட்சத்து, 19 ஆயிரத்து, 349 வெளிமாநில தொழிலாளர் விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் பின்னலாடை தொழிலில், 40 சதவீதம் அளவுக்கு, வெளிமாநில தொழிலாளர் பணியாற்றி வருகின்றனர். பின்னலாடை தொழில் சார்ந்த நிறுவனங்களில், ஆட்கள் பற்றாக்குறை, வெளிமாநிலங்களில் வேலை பற்றாக்குறை. அதன்படி, ஏஜன்சிகள் மூலம் வெளிமாநில தொழிலாளர் திருப்பூர் அழைத்து வரப்பட்டனர்.

கடந்த, 10 ஆண்டுகளாக, வடமாநில தொழிலாளர் வரத்து அதிகரித்துவிட்டது; சுதந்திரமாகவும், நம்பிக்கையாகவும் வாழ முடியும் என்பதால், திருப்பூர் வந்து சேர்கின்றனர்; கைநிறைய சம்பாதித்து, அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்புகின்றனர். இது, பொருளாதார நகர்வு என்று கூறப்பட்டாலும், தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க முடிகிறது.

வடமாநில தொழிலாளர், பின்னலாடை தொழிலில் மட்டுமல்ல, ஓட்டல்கள், பேக்கரிகள், மோட்டார் தொழிற்சாலைகள், விசைத்தறி, நுால் மில்கள், கட்டுமான தொழிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இருப்பினும், தமிழகம் வரும் வடமாநில தொழிலாளரின் விவரங்கள் எதுவும் சேகரிக்கப்படாமல் இருந்து வந்தது.

கொரோனா காலகட்டத்தில் தொழிலாளர்களை, அந்தந்த மாநிலங்களுக்கு பத்திரமாக அனுப்பி வைக்க, திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், 9 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது. அந்த சமயத்தில், 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர் திருப்பூரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

வடமாநில தொழிலாளரை பாதுகாப்பாக பராமரிக்கவும், தொழிலாளர் என்ற போர்வையில், வங்கதேசத்தினர் நுழைவதை தடுக்கவும், விவரங்களை முழுமையாக சேகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

கட்டுமான பணிகள், தொழிற்சாலைகள், அனைத்து தொழில் நிறுவனங்களில் பணியாற்றும், வெளிமாநில தொழிலாளர் விவரங்களை முழுமையாக சேகரிக்க தமிழக அரசு, நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் அதற்கான பணிகள், கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன.

தொழிலாளர் துறை மூலமாக, https://labour.tn.gov.in/ism என்ற இணையதள முகவரி வாயிலாக, வெளிமாநில தொழிலாளர் விவரம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, 2,19,349 வெளிமாநில தொழிலாளர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

பராமரிக்கப்படும்...:


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை நிறுவனம் மட்டுமல்லாது, அனைத்து வகையான வெளிமாநில தொழிலாளர் விவரமும் சேகரிக்கப்படுகிறது. தொழிலாளர்களால் இயலாது என்பதால், அந்தந்த தொழில் நிறுவனங்கள் வாயிலாக, ஆதார் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக வெளிமாநில தொழிலாளர் விவரம் முழுமையாக பெற்று பராமரிக்கப்படும். திட்டங்களை செயல்படுத்துவதும் எளிதாக இருக்கும். மாவட்டத்தில் மட்டும், இரண்டு லட்சத்து, 19 ஆயிரத்து, 349 வெளிமாநில தொழிலாளர்களின் முழுமையான விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

- தொழிலாளர் துறை அதிகாரிகள்:






      Dinamalar
      Follow us