ADDED : பிப் 03, 2026 06:18 AM
திருப்பூர்: தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) காயத்திரி அறிக்கை:
எடையளவு சட்டம், மறுமுத்திரையிடாத எடைக்கருவி, பொட்டல பொருட்கள் சட்டம் தொடர்பாக, பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டதில், 179 முரண்பாடுகளைக் கண்டறிந்து, நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
இரண்டு குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்திய நிறுவனங்கள் மீது போலீஸ் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிமாநில தொழிலாளர்கள் விவரங்களை, தமிழக அரசின், labour.tn.gov.in/ism என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, இரண்டு லட்சத்து, 22 ஆயிரத்து, 200 வெளிமாநில தொழிலாளர்களின் விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து தொழில்களிலும் பணிபுரியும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், https://eshram.gov.in. என்ற போர்ட்டலில் பதிவு செய்யலாம்.
