தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 24 பி.டி.ஓ.,க்கள் அதிரடி பணியிட மாற்றம்

 24 பி.டி.ஓ.,க்கள் அதிரடி பணியிட மாற்றம்

 24 பி.டி.ஓ.,க்கள் அதிரடி பணியிட மாற்றம்


ADDED : மே 19, 2026 11:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2026 11:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், 24 பி.டி.ஓ.,க்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

பொங்கலுார் பி.டி.ஓ. கனகராஜ், தாராபுரத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு பணிபுரியும் சுப்பிரமணியன், உடுமலைக்கும், திருப்பூர் வடக்கு உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரியும் அனார்கலி, குடிமங்கலத்துக்கும் வளர்ச்சிப்பிரிவுக்கும், அதே அலுவலகத்தில் வளர்ச்சி பிரிவில் பணிபுரியும் நாட்ராயன், கிராம ஊராட்சிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

உடுமலை பி.டி.ஓ. வெண்ணிலா, காங்கயத்துக்கும்; அங்கு பணிபுரியும் முருகன், ஊத்துக்குளிக்கும், திருப்பூர் 'டான்பி நெட்'டில் பணிபுரியும் பிரியா, குண்டடத்துக்கும், அங்கு பணிபுரியும் விஜயன், உடுமலைக்கும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். மூலனுார் பி.டி.ஓ. (கிராமம்) வெங்கடேசன், அதே அலுவலகத்தில் வளர்ச்சிப்பிரிவுக்கும், அதே பிரிவில் பணிபுரியும் சரவணன், கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

திருப்பூர் கலெக்டர் அலுவலக மேலாளர் (வளர்ச்சி) அனுராதா, பல்லடத்துக்கும், அங்கு பணிபுரியும் சுரேஷ்குமார், வெள்ளகோவிலுக்கும், உடுமலை பி.டி.ஓ., பாரத் கண்ணன், பொங்கலுாருக்கும், அங்கு பணிபுரியும் சரவணன் திருப்பூருக்கும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பணிபுரியும் வேலுசாமி, பொ ங்கலுாருக்கும், திருப்பூர் பி.டி.ஓ., ஜோதி, வெள்ள கோவிலுக்கும், அங்கு பணிபுரியும் ராகவேந்தி ரன், கலெக்டர் அலுவலக மே லாளராக (வளர்ச்சிப்பிரிவு) மாற்றப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பிரிவில் பணிபுரியும் கோகிலா, திருப்பூருக்கும், அங்கு பணிபுரியும் விஜயகுமார், திருப்பூர் தெற்கு நிர்வாக பிரிவுக்கும், குண்டடம் பி.டி.ஓ., விஜயன், உடுமலைக்கு வளர்ச்சி பிரிவுக்கும், தாராபுரம் சுப்பிரமணியன், உடுமலைக்கு கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாகவும், பி.டி.ஓ., விஜயகுமார், அதே அலுவலகத்தில் வளர்ச்சி பி.டி.ஓ.,வாகவும், அங்கு பணிபுரியும் விமலாவதி, ஊரக வளர்ச்சி முகமைக்கும், காங்கயம் பி.டி.ஓ., முருகன், ஊத்துக்குளிக்கு கிராம ஊராட்சி பி.டிஓ.,வாக மாற்றப்பட்டுள்ளார்.

பல்லடம் சுரேஷ்குமார், வெள்ளகோவிலுக்கும், அங்கு பணிபுரியும் ஸ்ரீதர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கும், குடிமங்கலம் சிவகுருநாதன், திருப்பூர் வடக்கு நிர்வாக பிரிவுக்கும், திருப்பூர் தெற்கு நிர்வாக பிரிவில் பணிபுரியும் பானுப்ரியா, 'டான்பி நெட்' க்கு மாற்றப்பட்டுள்ளார். பி.டி.ஓ.,க்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்ட இடங்களில் சேர்ந்து, அந்த அறிக்கையை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us