/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
2.5 லட்சம் மரக்கன்றுகள்; வனத்துறையினர் இலக்கு
/
2.5 லட்சம் மரக்கன்றுகள்; வனத்துறையினர் இலக்கு
ADDED : அக் 25, 2024 10:36 PM
திருப்பூர்: மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் திட்டம் ஊக்குவிக்கப்படுகிறது.
தமிழகத்தின் வனப்பரப்பு, 23.7 சதவீதம்; இதை, 33 சதவீதமாக அதிகரிக்கும் நோக்கில், 'பசுமை தமிழகம்' என்ற திட்டத்தை, வனத்துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில், தொழில் நகரமான திருப்பூரும் பங்களிக்க இருக்கிறது; அதற்கான முன்னெடுப்பை எடுத்திருக்கிறது, திருப்பூர் வனத்துறை.
தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலை, தனியார் அமைப்புகள் மற்றும் தனியார் நிலங்களில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கி, அவற்றை நட்டு தருகிறது வனத்துறை. மாவட்ட வாரியாக வனத்துறைக்கு இலக்கும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
திருப்பூரை பொறுத்தவரை, வன விரிவாக்க சரகத்துக்கு, 50 ஆயிரம் மரக்கன்று, காங்கயம் மற்றும் திருப்பூர் வனச்சரகத்துக்கு தலா, ஒரு லட்சம் என, மொத்தம், 2.50 லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
மகாகனி, தேக்கு, சந்தனம் உள்ளிட்ட மரக்கன்று கள் இத்திட்டத்தின் கீழ் நடவு செய்யப்படுகிறது.