/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
25 லட்சம் மரம்... பசுமை போற்றும் அறம்
/
25 லட்சம் மரம்... பசுமை போற்றும் அறம்
ADDED : ஜன 03, 2026 06:01 AM

திருப்பூர்: 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின், 11வது ஆண்டு விழா, வரும், மங்கலம் மாதேசிலிங்கம் கோவில் நிலத்தில், இன்று காலை, 8:00 மணிக்கு நடக்கிறது.
வெற்றி அறக்கட்டளை சார்பில், கடந்த, 2015 முதல், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் துவங்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், மரக்கன்று நட்டு வளர்க்கும் திட்டம் வேகமாக வெற்றியடைந்து வருகிறது.
கடந்த, 11 ஆண்டுகளில், 25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன; அவற்றில், 22 லட்சம் கன்றுகள் இளம் மரமாக வளர்ந்து காட்சியளிக்கின்றன.
'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது; அதன்படி, இன்று நடக்கும் விழாவில், மூன்று லட்சமாவது மரக்கன்றை நட்டு, 11வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.
'வெற்றி' அமைப்பின் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், திருப்பூர் மேற்கு ரோட்டரி சார்பில், மங்கலம் மாதேசிலிங்கம் கோவில் நிலத்தில், இன்று காலை 8:00 மணிக்கு மரக்கன்று நடும் விழா நடக்கிறது.
மொத்தம், 10 ஏக்கர் கோவில் நிலத்தில் மரக்கன்று நட்டு, பாதுகாப்பு வேலி, சொட்டுநீர்ப் பாசன வசதி அமைக்கப்படுகிறது.
மாநில திட்டக்குழு உறுப்பினர் டாக்டர் சிவராமன், ஓய்வு பெற்ற கால்நடை பல்கலைக்கழக முனைவர் புண்ணியமூர்த்தி தலைமை வகிக்கின்றனர்.
ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் ரத்தினவேல் பாண்டியன், துணை கமிஷனர் ஹர்சினி, உதவி கமிஷனர் தமிழ்வாணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை, வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் மற்றும் திருப்பூர் மேற்கு ரோட்டரி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
2015 - 1.35 லட்சம்: 2016 - 2.25 லட்சம்: 2017 - 1.55 லட்சம்: 2018 - 1.50 லட்சம்: 2019 - 1.35 லட்சம்: 2020 - 2.50 லட்சம்: 2021 - 2.60 லட்சம்: 2022 - 2.75 லட்சம்: 2023 - 2.15 லட்சம்: 2024 - 4 லட்சம்: 2025 - 3 லட்சம்: மொத்தம் - 25 லட்சம்:

