/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வருவாய் ஆய்வாளர் 25 பேர் 'டிரான்ஸ்பர்'
/
வருவாய் ஆய்வாளர் 25 பேர் 'டிரான்ஸ்பர்'
ADDED : பிப் 06, 2025 02:15 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையிலான 25 பேரை பணியிட மாறுதல் செய்து, டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
ஊத்துக்குளி, பல்லடம், தாராபுரம், காங்கயம், உடுமலை உள்ளிட்ட தாலுகாக்களில் பணிபுரியும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
நிர்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள மாறுதல்கள் மற்றும் நியமனங்கள் தொடர்பாக எவ்வித கோரிக்கைகள், மேல் முறையீடுகளும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள், மாறுதலை தவிர்க்கும்வகையில் விடுப்பில் சென்றாலோ அல்லது புதிய பணியிடத்தில் சேர தவறினாலோ, தமிழ்நாடு குடிமைப்பணிகள் விதிகளின் படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, டி.ஆர்.ஓ., எச்சரித்துள்ளார்.