/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவியர் கூடைப்பந்து 27 அணிகள் பங்கேற்பு
/
மாணவியர் கூடைப்பந்து 27 அணிகள் பங்கேற்பு
ADDED : ஆக 18, 2025 09:01 PM
உடுமலை; உடுமலை குறுமைய அளவில், மாணவியருக் கான கூடைப்பந்து போட்டி நடந்தது.
பாரதியார் பிறந்தநாள் மற்றும் குடியரசு தினத்தையொட்டி, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் குறுமைய விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படுகிறது. உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றிணைந்த குறுமைய விளையாட்டுப்போட்டிகளை, சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நடத்துகிறது.
போட்டிகள் ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவுகளில் நடக்கிறது. வாலிபால், கால்பந்து, செஸ், சிலம்பம் உட்பட குழு விளையாட்டுப்போட்டிகள் நடந்தது. குழுவிளையாட்டுப்போட்டிகளின் இறுதியாக, மாணவியருக்கான கூடைப்பந்து போட்டி குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மெட்ரிக் பள்ளி யில் நடந்தது. போட்டியில் 27 அணிகள் பங்கேற்றன.
ஜூனியர் பிரிவில், கடத்துார் அரசு உயர்நிலைப்பள்ளி முதலிடத்திலும், குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மெட்ரிக் பள்ளி இரண்டாமிடத்திலும் வெற்றி பெற்றன .
சீனியர் பிரிவில், ஆர்.வி.ஜி., முதலிடத்திலும், சீனி வாசா மெட்ரிக் இரண்டாமிடத்திலும் வெற்றி பெற்றன. சூப்பர் சீனியர் போட்டியில், சீனிவாசா பள்ளி முதலிடத்திலும், அன்னை அபிராமி மெட்ரிக் பள்ளி இரண்டாமிடத்திலும் வெற்றி பெற்றன. போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன.
குறுமைய அ ளவிலான தடகளப்போட்டிகள், ஆக., 19, 20, 21 தேதிகளில் அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது.