/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதுக்கடைக்கு 3 நாட்கள் விடுமுறை
/
மதுக்கடைக்கு 3 நாட்கள் விடுமுறை
ADDED : ஜன 12, 2024 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:இம்மாதத்தில், மதுக்கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள், இம்மாதம் மூன்று நாள் மூடப்படுகிறது.
இது குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அறிக்கையில், 'வரும் 16ம் தேதி திருவள்ளுவர் தினம், 25ம் தேதி வடலுார் ராமலிங்கர் நினைவு தினம், 26ம் தேதி குடியரசு தினம் ஆகிய மூன்று நாளிலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், மன மகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற பார்கள் அனைத்தும் செயல்படாது. மீறி செயல்பட்டால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.