/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அண்ணாதுரை - அன்பழகன் விருதுக்கு 3 தலைமை ஆசிரியர், 2 பள்ளிகள் தேர்வு
/
அண்ணாதுரை - அன்பழகன் விருதுக்கு 3 தலைமை ஆசிரியர், 2 பள்ளிகள் தேர்வு
அண்ணாதுரை - அன்பழகன் விருதுக்கு 3 தலைமை ஆசிரியர், 2 பள்ளிகள் தேர்வு
அண்ணாதுரை - அன்பழகன் விருதுக்கு 3 தலைமை ஆசிரியர், 2 பள்ளிகள் தேர்வு
ADDED : ஜூலை 04, 2025 11:13 PM
திருப்பூர்; பள்ளிக் கல்வித்துறையின் அண்ணாதுரை தலைமைத்துவ விருதுக்கு திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மூன்று தலைமை ஆசிரியர்கள் தேர்வாகியுள்ளனர். சிறந்த பள்ளிகளுக்கான விருதை இரண்டு பள்ளிகள் பெற்றுள்ளன.
சிறப்பாக பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை, 2022 முதல் அண்ணாத்துரை தலைமைத்துவ விருது வழங்கி கவுரவிக்கிறது. இவ்விருது பெறுபவருக்கு பாராட்டுச் சான்றிதழ், நினைவு கேடயம், 10 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை அரசால் வழங்கப்படும்.
தனித்துவமான பள்ளி செயல்பாடு, உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர் திறன் மேம்பாடு, தேர்ச்சி விகிதம், ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட, 19 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, மதிப்பெண் அடிப்படையில் சிறப்பாக பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள் கல்வித்துறையால், தேர்வு செய்யப்படுகின்றனர்.
அவ்வகையில், ஊத்துக்குளி நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி, சுண்டக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காளியப்பன், பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆனந்தி ஆகியோர் அண்ணாதுரை தலைமைத்துவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளி கல்வித்துறையின், 100 நாள் சவாலை ஏற்று, வாசித்தல், கணித அடிப்பை திறனில் முன்னேற்றம் அடைதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்ட, பள்ளிகளுக்கு, அன்பழகன் விருது வழங்கப்படுகிறது.
இவ்விருதுக்கு, தாராபுரம், எஸ்.,காங்கயம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
விருது பெற தேர்வானவர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில், திருச்சி தேசிய கல்லுாரி வளாகத்தில் நாளை (6ம் தேதி) முப்பெரும் விழா நடக்கிறது.
மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கல்வி) பழநி தலைமையில், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பங்கேற்கின்றனர்.