/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூலிப்படை தாக்குதல்: மேலும் 3 பேர் கைது
/
கூலிப்படை தாக்குதல்: மேலும் 3 பேர் கைது
ADDED : ஜன 30, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்;பல்லடம் அருகே, தனியார் 'டிவி' நிருபர் நேச பிரபு என்பவரை, கூலிப்படையை சேர்ந்த சிலர், அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றனர்.
இது தொடர்பாக, பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர். இதில், பிரவீன் 23, சரவணன், 22 ஆகிய இருவரை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். நேற்று, முகமது நபி, 24, பாலபாரதி, 21, ஹரிவரதன், 22 ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருவதால், முழு விசாரணைக்கு பின்னரே, முழுமையான குற்றப்பின்னணி குறித்து தெரிவிக்க முடியும் என போலீசார் தெரிவித்தனர்.