/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நண்பர் கொலை வழக்கில் மேலும் 3 வாலிபர்கள் கைது
/
நண்பர் கொலை வழக்கில் மேலும் 3 வாலிபர்கள் கைது
ADDED : பிப் 23, 2024 12:55 AM
திருப்பூர்:மங்கலத்தை சேர்ந்த அசோக்குமார், 28, நசீம், 32, ஆல்வின், 30, வினோத், 33, அருண், 28 ஆகிய, ஐந்து பேரும் நண்பர்கள். கடந்த 18ம் தேதி அருண், தனது தங்கை திருமணத்தையொட்டி நண்பர்களுக்கு, காந்தி நகரில் உள்ள ஆல்வினின் உறவினர் வீட்டில் மது விருந்து ஏற்பாடு செய்தார்.
மறுநாள் அதிகாலையில் போதையில் ஏற்பட்ட பிரச்னையில், அசோக்குமார் கடப்பாரையால் குத்தி கொலை செய்யப்பட்டார். அனுப்பர்பாளையம் போலீசார் தனிப்படை அமைத்து தேடினர். இதற்கிடையில், திருப்பூர் ஜே.எம்:எண் - 3 கோர்ட்டில் நசீம் நேற்று முன்தினம் மாலை சரணடைந்தார். நண்பர்களான வினோத்குமார், 31, ஆல்வின், 28 மற்றும் பிலால், 34 என மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.