/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலுக்கு அம்மன் உள்பட 3 புதிய தேர்கள்
/
ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலுக்கு அம்மன் உள்பட 3 புதிய தேர்கள்
ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலுக்கு அம்மன் உள்பட 3 புதிய தேர்கள்
ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலுக்கு அம்மன் உள்பட 3 புதிய தேர்கள்
ADDED : மே 29, 2025 12:40 AM
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில், விசாலாட்சி அம்மன், முருகர் மற்றும் சண்டிகேஸ்வருக்கு தனி தேர்கள் செய்ய, அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.
திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில்களில், வைகாசி விசாக தேர்த்திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடந்து வருகிறது. சிவன் மற்றும் பெருமாள் சுவாமிகளுக்கு மட்டும் பெரிய தேர் உள்ளது. விநாயகருக்கு சிறிய மரத் தேர் உள்ளது. இந்நிலையில், பக்தர்கள் முயற்சியால், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு, தனியே மரத்தேர் செய்ய திட்டமிடப்பட்டது.
இதற்கு அறநிலையத்துறையில் அனுமதி பெறும் பணி துவங்கியது. முருகருக்கு தேர் செய்யும் போது, ஆகமவிதிகளின்படி, அம்பாளுக்கும் தனி தேர் செய்ய வேண்டும் என்ற கருத்து நிலவியது. அதன்படி, விசாலாட்சி அம்மன், வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்பிரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரருக்கு தனியே தேர்கள் உருவாக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.