ADDED : பிப் 23, 2024 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;கருவம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 40. அவிநாசி ரோடு, பெரியார் காலனியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். கடையையொட்டி மேல்மாடியில் செந்தில்குமாரின் உறவினர் ஒருவர் தங்கியுள்ளார். உறவினர் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்த, மூன்று நபர்கள் அவரை ஆயுதங்களால் தாக்கி, ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். அனுப்பர்பாளையம் போலீசார் விசாரித்தனர்.
இதுதொடர்பாக, பீகார் மாநிலத்தை சேர்ந்த பர்வேஷ், 28, ரஹமத்துல்லா, 23 மற்றும் வாசிம், 22 என, மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.