ADDED : அக் 23, 2024 06:28 AM

பல்லடம் : காரணம்பேட்டையை சேர்ந்தவர் கண்ணம்மாள், 70. வீட்டில் தனியாக வசித்து வரும் கண்ணம்மாள், முகம், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார், 4 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதில், மூன்று பேரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தை சேர்ந்த பாஸ்கர் 22. காரணம்பேட்டையில் உள்ள ஓட்டலில் வேலைபார்த்து பார்த்து வந்தார். இவர், கண்ணம்மாளுக்கு அவ்வப்போது உணவு எடுத்துச் சென்று வழங்குவது வழக் கம். அவர் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து, தனது அண்ணன் கருத்தபாண்டியிடம் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, பாஸ்கர், கருத்தபாண்டி உட்பட ஐந்து பேர் கொண்ட கும்பல், வீட்டில் தனியாக இருந்த கண்ணம்மாளை கொலை செய்து, தங்க செயின், வளையல் ஆகியவற்றை திருடி சென்றனர். இதில் தொடர்புடைய கருத்தபாண்டி, 25, இசக்கிமுத்து, 25, மற்றொரு இசக்கிமுத்து, 40 ஆகிய மூன்று பேரும், திருநெல்வேலியில் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டு, 13 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டன, என்றனர்.