/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வௌ்ளகோவிலில் 'ஆக்டிங்' டிரைவர் கொலை ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 3 பேர் கைது
/
வௌ்ளகோவிலில் 'ஆக்டிங்' டிரைவர் கொலை ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 3 பேர் கைது
வௌ்ளகோவிலில் 'ஆக்டிங்' டிரைவர் கொலை ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 3 பேர் கைது
வௌ்ளகோவிலில் 'ஆக்டிங்' டிரைவர் கொலை ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 3 பேர் கைது
ADDED : மார் 22, 2026 07:23 AM
காங்கேயம்:திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவில் அருகே சேமலை
கவுண்டன்
வலசை சேர்ந்தவர் சாமிநாதன், 46; ஆக்டிங் டிரைவர். தாய் லட்சுமியுடன்,
80, வசித்து வந்தார். வெள்ளகோவிலுக்கு நேற்று முன்தினம் காலை
சென்றவர், மதியம் வீட்டுக்கு வந்-துள்ளார். பின் வெளியே சென்றுள்ளார்.
இரவு, 7:00 மணிக்கு காரில் வந்த சிலர், சாமிநாதனை இறக்கிவிட்டு
சென்றனர். நள்ளி-ரவில் இறந்து கிடந்தார். புகாரின்படி வெள்ளகோவில்
போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இதில் மூவரை கைது செய்த நிலையில், இருவரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து
போலீசார் கூறியதாவது: வெள்ளகோவிலை சேர்ந்-தவர் சுரேஷ்குமார், 43;
தென்னிலையை சேர்ந்தவர் பழனிவேல், 50; இருவரும் சேர்ந்து வெள்ளகோவில்
பகுதியில் மனை விற்-பனை, வீடு கட்டி கொடுக்கும் தொழில் செய்து
வருகின்றனர். இதற்கான தளவாட பொருட்களை, அந்த இடத்தில் போட்டு
வைத்திருந்தனர். இந்த பொருட்களை சாமிநாதன் திருடி சென்று
விற்றுள்ளார். இதனால் அவரை அழைத்து சென்று தாக்கியுள்-ளனர்.
பிறகு அவர்
திருடிய பொருட்களை பெற்றுக்கொண்டு, காரில் கொண்டு வந்து விட்டு
சென்றுள்ளனர். பலமாக தாக்கி-யதில் சாமிநாதன் இறந்துள்ளார். இதில்
ஈடுபட்ட சுரேஷ்குமார், வெள்ளகோவில் அரவிந்த், 41,
சுக்கிட்டிபாளையம் லிங்கேஸ்-வரன், 33, ஆகியோர் கைது
செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள பழனிவேல், வெள்ளகோவில் கார்த்தி,
33, ஆகியோரை தேடி வருகிறோம். இவ்வாறு கூறினர்.

