/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அபராதம் விதிக்காமல் லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., உட்பட 3 பேர் 'சஸ்பெண்ட்'

ADDED : மே 06, 2025 06:23 AM

திருப்பூர்; திருமுருகன்பூண்டி போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த எஸ்.எஸ்.ஐ., மோகன், 55. முதல்நிலை போலீஸ்காரர் கோபிநாத், 32 மற்றும் ஆயுதப்படை போலீஸ்காரர் பிரேம்குமார், 28 ஆகியோர் திருப்பூர் அடுத்த வஞ்சிபாளையத்தில் உள்ள அரசு பள்ளி அருகே நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கை செய்தனர்.
அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், மதுபோதையில் காரை ஓட்டி வந்தது தெரிந்தது.
மதுபோதையில் ஓட்டியதற்கு அபராதம் விதிக்காமல், வாகன ஓட்டியிடம், 5 ஆயிரம் பேரம் பேசி பணியில் இருந்த போலீசார் வாங்கினர். அங்கிருந்து கிளம்பிய வாகன ஓட்டி, கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து தகவல் தெரிவித்தார்.
தொடர்ந்து, எஸ்.எஸ்.ஐ., கட்டுப்பாட்டு அறைக்கும், இரு போலீஸ்காரரையும் ஆயுதப்படைக்கு அனுப்பி கமிஷனர் இதுதொடர்பாக விசாரிக்க துணை கமிஷனருக்கு உத்தரவிட்டார். விசாரணையில், வழக்கு பதிந்து அபராதம் விதிக்காமல் அனுப்பியது தெரிந்தது.
மூன்று பேரையும் சஸ்பெண்ட் செய்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.