/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சபரிமலை செல்ல 3 சிறப்பு ரயில்கள்
/
சபரிமலை செல்ல 3 சிறப்பு ரயில்கள்
ADDED : நவ 18, 2024 06:22 AM
திருப்பூர்; சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, மூன்று சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கச்சிக்குடா - கோட்டயம் (எண்:07131) ரயில் வரும் 24ம் தேதி இயங்கும். இன்றும், வரும், 25ம் தேதியும் கோட்டயம் - கச்சிக்குடா சிறப்பு ரயில் (எண்:07132) இயங்கும். ைஹதராபாத் - கோட்டயம் சிறப்பு ரயில் (எண்:07135) நாளை (19ம் தேதி) மற்றும் 26ம் தேதியும், மற்றொரு சிறப்பு ரயில் (எண்:07137) வரும் 22 மற்றும், 29ம் தேதியும் இயங்கும். மறுமார்க்கமாக கோட்டயம் - ைஹதராபாத் ரயில் (எண்:07136) நவ., 20 மற்றும் 27ம் தேதியும், மற்றொரு ரயில் வரும், 23 மற்றும் 30ம் தேதியும் இயங்கும். மூன்று சிறப்பு ரயில் எண்களை கொண்டு முன்பதிவு, வந்து செல்லும் நேரம் உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ளலாம்.