UPDATED : ஜூலை 30, 2026 10:26 PM
ADDED : ஜூலை 30, 2026 10:10 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:காங்கயம் - - திருப்பூர் ரோடு, படியூர் சோதனைச்சாவடியில் வாகன சோதனையின் போது, கலர் ஜெராக்ஸ் மூலம் எடுக்கப்பட்ட 1.29 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகளுடன் டூவீலரில் வந்த கும்பகோணத்தைச் சேர்ந்த கண்ணன், 34 என்பவரை காங்கயம் போலீசார் கைது செய்தனர்.
வழக்கை விசாரித்த காங்கயம் சார்பு நீதிமன்ற நீதிபதி ஆனந்தன், கள்ளநோட்டைப் புழக்கத்தில் விட்ட குற்றத்திற்காகக் கண்ணனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்,15,000 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
