ADDED : ஏப் 22, 2025 06:18 AM
திருப்பூர்; திருப்பூரை சேர்ந்தவர் திருமூர்த்தி. திருப்பூர் பத்திரப்பதிவு ஜாய்ன்ட்-2 அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தார்.
அந்த பத்திரத்தில் திருத்தம் மேற்கொள்ள, முத்திரைத்தாள் தனி தாசில்தார் விஸ்வநாதனிடம் (ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர்) விடுப்பு ஆணை வழங்க கடந்த, 2009 ஜூலை 15ம் தேதி விண்ணப்பித்தார்.
விடுப்பு ஆணை வழங்க விஸ்வநாதன், அதே அலுவலகத்தில் பணியாற்றி வந்த முன்னாள் தாசில்தார் மீன்ராஜன், 80 ஆகியோர் தலா, 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டனர்.
திருமூர்த்தி திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின் பேரில், மறுநாள் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வைத்து, இருவரிடம் லஞ்ச பணத்தை கொடுத்தபோது, கையும் களவுமாக, இருவரை கைது செய்தனர்.
வழக்கை விசாரித்த திருப்பூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்லதுரை, இருவருக்கும் தலா மூன்றாண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜரானார்.