/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில கூடைப்பந்து போட்டி மாவட்டத்தில் 30 பேர் தேர்வு
/
மாநில கூடைப்பந்து போட்டி மாவட்டத்தில் 30 பேர் தேர்வு
மாநில கூடைப்பந்து போட்டி மாவட்டத்தில் 30 பேர் தேர்வு
மாநில கூடைப்பந்து போட்டி மாவட்டத்தில் 30 பேர் தேர்வு
ADDED : மார் 24, 2025 05:38 AM
திருப்பூர், : மாநில கூடைப்பந்து ஜூனியர் அணி தேர்வு போட்டி கோவையில் வரும் 29 முதல் ஏப்ரல் 1 வரை ஆண்களுக்கும், ஏப்ரல் முதல் வாரம் தொட்டியத்தில் பெண்களுக்கும் நடக்கிறது. இதில், பங்கேற்க உள்ள திருப்பூர் மாவட்ட ஜூனியர் கூடைப்பந்து அணிக்கான தேர்வு, காலேஜ் ரோடு, எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் இரண்டு நாள் நடந்தது.
மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன் நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர். மாவட்டம் முழுதும் இருந்த, 60 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இவர்களில் இருந்து தலா, 15 ஆண்கள், பெண்கள் என, 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மாவட்ட அளவிலான பயிற்சி முடித்து, மாநில போட்டியில் பங்கேற்க உள்ளனர்.