ADDED : ஜன 28, 2024 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் 31ம் தேதி நடக்கிறது. இரண்டாவது தளம், அறை எண்: 240ல், காலை 10:30 மணிக்கு துவங்கி கூட்டம் நடைபெறும். அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
விவசாயிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை, கலெக்டரிடம் வழங்கவேண்டும். பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில், ஒரு சங்கத்துக்கு ஒருவர் வீதம், தங்கள் கோரிக்கைகளை நேரடியாக கலெக்டரிடம் தெரிவிக்கலாம். நுண்ணுயிர் பாசனம் அமைக்க வழிகாட்டும் வேளாண் உதவி மையம் அமைக்கப்படுகிறது. இம்மையத்தில், நுண்ணுயிர் பாசனம் அமைப்பது குறித்த தகவல்கள் அளிக்கப்படும். நுண்ணுயிர் பாசன மேலாண்மை போர்ட்டலில் பதிவு செய்துகொடுக்கப்படும்.