/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சதுரங்க போட்டி 321 பேர் பங்கேற்பு
/
சதுரங்க போட்டி 321 பேர் பங்கேற்பு
ADDED : டிச 09, 2024 07:33 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சதுரங்க அசோசியேஷன், கிங்ஸ் செஸ் அகாடமி சார்பில், 'செஞ்சுரி டிராபி 2024' - மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நேற்று நடந்தது.
திருப்பூர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவு, செஞ்சுரி பவுண்டேசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 321 பேர் பங்கேற்றனர்.ஒன்பது, 12, 15 மற்றும் பொதுபிரிவில் மாணவ, மாணவியர், ஆண், பெண் இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்பட்டது. முன்னதாக, சதுரங்க போட்டிகளை செஞ்சுரி பள்ளி, கல்வி குழுமங்களின் தாளாளர் சக்திதேவி துவக்கி வைத்தார்.
'நாக்-அவுட்' முறையில் போட்டியில் நடத்தப்பட்டு, இறுதி போட்டிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவர் செல்வராஜ், செயலாளர் சிவன், பொருளாளர் ராஜேந்திரன் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.