/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மோசடி தம்பதியிடம் 35 சவரன் நகை மீட்பு; பலரிடம் கைவரிசை காட்டியது அம்பலம்

ADDED : ஜன 15, 2024 02:14 AM

திருப்பூர்:திருப்பூரில் 40 லட்சம் ரூபாய் மோசடி தொடர்பாக கைதான, சென்னை தம்பதி அடகு வைத்திருந்த, 35 சவரன் நகைகளை போலீசார் மீட்டனர்.
திருப்பூர், குமார் நகரை சேர்ந்தவர் பழனியம்மாள், 60. பக்கத்து வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்த சென்னை, தி.நகரை சேர்ந்த சுரேஷ், 49, அவரது மனைவி சென்பியூலா, 33 ஆகியோர், பழனியம்மாளிடம், ''நாங்கள் துணி கடை நடத்தி வருகிறோம். இதில், முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும்'' என்று ஆசை வார்த்தை கூறினர். இதை நம்பி, பல்வேறு கட்டங்களாக 30 லட்சம் ரூபாயை இவர்களிடம் பழனியம்மாள் கொடுத்தார்.
இந்நிலையில், தம்பதி திடீரென தலைமறைவாகி விட்டனர். கடந்த மாதம் 30ம் தேதி, திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிந்து, தம்பதியை கைது செய் தம்பதியை கோர்ட் அனுமதியோடு கஸ்டடி எடுத்து போலீசார் விசாரித்தனர்.
ஆண்டுக்கு ஒரு ஊரில் தங்கி, இதேபோன்று பலரிடம் மோசடியில் ஈடுபட்டதும், திருப்பூரில் மட்டும் 40 லட்சம் ரூபாய் மோசடி செய்ததும் தெரியவந்தது.
இவர்கள் அளித்த தகவலையடுத்து, இவர்கள் அடகு வைத்திருந்த 35 சவரன் நகைளை போலீசார் மீட்டனர்.
திருப்பூரில் இவர்கள் மீது எட்டு பேர், இதுவரை புகார் அளித்துள்ளனர் என்று போலீசார் கூறினர்.