sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 கலெக்டர் அலுவலகத்தில் 4 மணி நேர காத்திருப்பு; நேர்காணலுக்கு சென்ற மாற்றுத்திறனாளிகள் அவதி

/

 கலெக்டர் அலுவலகத்தில் 4 மணி நேர காத்திருப்பு; நேர்காணலுக்கு சென்ற மாற்றுத்திறனாளிகள் அவதி

 கலெக்டர் அலுவலகத்தில் 4 மணி நேர காத்திருப்பு; நேர்காணலுக்கு சென்ற மாற்றுத்திறனாளிகள் அவதி

 கலெக்டர் அலுவலகத்தில் 4 மணி நேர காத்திருப்பு; நேர்காணலுக்கு சென்ற மாற்றுத்திறனாளிகள் அவதி


ADDED : ஜன 30, 2026 06:48 AM

Google News

ADDED : ஜன 30, 2026 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாக தரைதளத்தில் செயல்படும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலத்தில், மாற்றுத்திறனாளிகளை, இன்னலுக்கு உள்ளாக்குவது தொடர்கதையாக உள்ளது.

கடந்த 22ல் நடைபெற்ற இலவச ஸ்கூட்டர் நேர்காணலுக்காக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் உறவினர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் வந்தனர். சரியான திட்டமிடுதலின்றி நடத்திய நேர்காணலில், மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கு கூட இடமின்றி தவித்தனர்.

கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கிற்கு வெளியே, மாற்றுத்திறனாளிகளை கால்கடுக்க காத்து நிற்கவைத்து, ஸ்கூட்டர் ஓட்டி காட்டச்செய்து நேர்காணல் நடத்தினர். இதுதொடர்பாக, கடந்த, 23ம் தேதி 'தினமலர்' நாளிதழில், படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், விடுபட்டோர் மற்றும் எம்.பி. - எம்.எல்.ஏ., நிதியில் இலவச ஸ்கூட்டர் வழங்க நேர்காணல் நேற்று நடத்தப்பட்டது. குறைகேட்பு கூட்ட அரங்கில் வேறு துறை சார்ந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அரசு அலுவலர்களின் வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்டு, போர்டிகோ பகுதியில், ஸ்கூட்டருக்கான நேர்காணல் நடத்தப்பட்டது.

குன்னத்துார் உள்பட தொலை துாரங்களிலிருந்து, நேர்காணலுக்கு, மாற்றுத்திறனாளிகள் பத்துக்கும் மேற்பட்டோர், காலை, 9:30 மணிக்கு, கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு வந்துவிட்டனர்.

அவர்களுக்கு டோக்கன் வழங்கி, போர்டிகோவில் இருக்கையில் அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், பணி நிமித்தமாக வெளியே சென்றுவிட்டார். நேர்காணலை நடத்தவேண்டிய பொறுப்பு, இளநிலை மறுவாழ்வு அலுவலர் குழந்தைசாமியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அதிகாரிகள் அலட்சியம் காலை, 11:00 மணியளவில், வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலக ஆய்வாளர் கவின்ராஜ் வந்தார். மாற்றுத்திறனாளி ஒருவரை ஸ்கூட்டரில் அமரவைத்து போட்டோ எடுத்தனர். மறுகணமே, கலெக்டர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க அவர் சென்று விட்டார். எலும்புமுறிவு மருத்துவரும் வரவில்லை.

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினரோ, நேர்காணல் நடத்தாமல் வீண் காலதாமதம் செய்தனர். நேர்காணலுக்கு பயன்படுத்த மாற்றுத்திறனாளி ஒருவரிடம் ஸ்கூட்டர் கேட்டனர். அவரோ, போதுமான அளவு பெட்ரோல் இல்லை என்று கூறிவிட்டார். மதியம், 12:30 மணி அளவிலேயே, 100 ரூபாய் கொடுத்து, ஸ்கூட்டரில் பெட்ரோல் நிரப்பி வரச்செய்தனர். அதன்பின், மதியம் 1:00 மணி அளவிலேயே, நேர் காணல் நடத்தினர். மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவராக, ஸ்கூட்டரில் ஏறி அமர்ந்து, இயக்கி காண்பித்தனர்.

நீண்ட நேர காத்திருப்பால், மாற்றுத்திறனாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். மாற்றத்திறனாளிகள் நல அலுவலகத்திலேயே இப்படி, மாற்றுத்திறனாளிகள் இன்னலுக்கு உள்ளாக்கப்படும் நிலை மாறவேண்டும்.

நேர்காணல் உள்பட அனைத்து முகாம்கள், நிகழ்வுகளையும் சரியான திட்டமிடுதல், போதிய முன்னேற்பாடுகளுடன் மட்டுமே நடத்த வேண்டும்.

நல அலுவலர், வட்டார போக்குவரத்து அலுவலர், எலும்புமுறிவு மருத்துவர் முன்னிலையில் நேர்காணல் நடத்தி, ஸ்கூட்டர் பயனாளிகளை தேர்வு செய்யும் நெறிமுறையை கடைப்பிடிக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எவ்வித காரணமும் இன்றி, நான்கு மணி நேரத்துக்கு மேல் காத்திருக்கச் செய்து நேர்காணல் நடத்தியது, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினரின் அலட்சிய போக்கையே காட்டுகிறது







      Dinamalar
      Follow us