ADDED : பிப் 03, 2026 06:10 AM
திருப்பூர்: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ், 38. திருப்பூர் வஞ்சிபாளையத்தில் தங்கி ஜாப் ஆர்டர் செய்து வருகிறார்.
சமீபத்தில், தன் பாலின சேர்க்கை செயலியான, 'கிரைண்ட் ஆர் ஆப்'பை பதிவிறக்கம் செய்து பேசி வந்தார்.
அப்போது, கரூரை சேர்ந்த ஒருவர் பேசினார். அவர் தினேஷை சந்திக்க நேரில் வந்தார். காரில் ஏறிய இருவரும் பேசி கொண்டு சென்றனர். உடன் வந்த வாலிபர், 'நண்பர்கள் இருவர் உள்ளனர். அவர்களையும் அழைத்து செல்லலாம்' என கூறி, வஞ்சிபாளையம் ரோட்டில் நின்றிருந்த அவர்களையும் காரில் ஏற்றினார்.
இதையடுத்து, தினேஷை மிரட்டிய இவர்கள், மொபைல் போன், வங்கியில் இருந்த, 20 ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டு, அவரை நடுரோட்டில் இறக்கி விட்டு காரில் தப்பி சென்றனர். திருமுருகன்பூண்டி போலீசார் விசாரித்தனர்.
கரூரை சேர்ந்த, 17 வயது சிறுவன், உதயகுமார், 23, மாணிக்கம், 27, சஹாரா, 22 என, நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

