/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண்ணுளிப் பாம்பு விற்க முயன்ற 4 பேர் கைது
/
மண்ணுளிப் பாம்பு விற்க முயன்ற 4 பேர் கைது
ADDED : பிப் 02, 2025 01:02 AM
திருப்பூர்: கொடுவாய் பகுதியில், சட்டவிரோதமாக சிலர் மண்ணுளிபாம்பை விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால், காங்கயம் வனச்சரக அலுவலர் மவுனிகா தலைமையிலான குழுவினர் கண்காணித்து வந்தனர். அப்போது, மண்ணுளிபாம்பை விற்பனை செய்ய முயன்றவர்களை வனத்துறையினர் பிடித்தனர்.
விசாரணையில், தஞ்சாவூரை சேர்ந்த பால்சாமி, சிவன்மலையை சேர்ந்த முருகேசன், சதீஷ், புதுக்கோட்டையை சேர்ந்த சந்திரன் என, நான்கு பேரை கைது செய்தனர்.
எந்தவொரு வன உயிரினங்களையும் பிடிக்கவோ, துன்புறுத்துவதோ கூடாது. வீடியோ பதிவிடுவது, விற்பனை செய்ய முயற்சி செய்வது போன்றவை தவறு. அதனை மீறி இதுபோன்ற செயல்களிலும் ஈடுபடுவது வன உயிரின பாதுகாப்பு சட்டபடி குற்றம். தகவல் தெரிந்தால் மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கலாம் என்று தெரிவித்தனர்.