ADDED : மே 09, 2026 03:19 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில், தாசில்தார் நிலையிலான அதிகாரிகள் நான்குபேரை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் மனிஷ் நாரணவரே உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் நெடுஞ்சாலை அலகு - 4 நிலமெடுப்பு தனி தாசில்தார் ஜெகநாதன், அவிநாசி தாசில்தாராகவும், அங்கு பணிபுரியும் விஜயராஜ், ஊத்துக்குளிக்கும் மாறுதல் பெற்றனர்.
ஊத்துக்குளி தாசில்தார் கதிர்வேல், காங்கயத்துக்கும், அங்கு பணிபுரியும் தங்கவேலு, திருப்பூர் நெடுஞ்சாலைகள் அலகு - 4க்கு தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
நிர்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நியமனம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகள் மற்றும் மேல்முறையீடுகளும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள், உரிய காலத்துக்குள் புதிய பணியிடத்தில் பொறுப்பேற்க வேண்டும். இல்லாதபட்சத்தில், சம்பளமில்லாத அசாதாரண விடுப்பாக கருதப்படும் என, கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
