/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில அளவிலான விளையாட்டு ; 400 போட்டியாளர்கள் பங்கேற்பு
/
மாநில அளவிலான விளையாட்டு ; 400 போட்டியாளர்கள் பங்கேற்பு
மாநில அளவிலான விளையாட்டு ; 400 போட்டியாளர்கள் பங்கேற்பு
மாநில அளவிலான விளையாட்டு ; 400 போட்டியாளர்கள் பங்கேற்பு
ADDED : ஜன 31, 2024 12:14 AM
உடுமலை:உடுமலை ஆர்.வி.ஜி., ஸ்போர்ட்ஸ் அகாடமியில், மாநில அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது.
குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., ஸ்போர்ட்ஸ் அகாடமியின் சார்பில் நடத்தப்படும் 'ட்ரியம்ப் டிராபி' விளையாட்டுப்போட்டி 2 நாட்கள் நடந்தது. இதில் கால்பந்து, கூடைப்பந்து, மற்றும் வாலிபால் விளையாட்டுகள் இடம் பெற்றன.
போட்டிகளில், திருப்பூர், கோவை, ஈரோடு, மதுரை மட்டுமின்றி, கேரள மாநிலத்திலிருந்தும் மொத்தமாக, 400 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு விளையாட்டு சங்கங்களைச்சேர்ந்த 12 நடுவர்கள், 30 பயிற்சியாளர்களும் பங்கேற்றனர். ஆர்.வி.ஜி., ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் ஜூலியா தலைமை வகித்தார்.
ஆர்.வி.ஜி., கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சந்தோஷ் போட்டிகளை துவக்கி வைத்தார். இறுதியாக கால்பந்து போட்டியில், மலப்புரம் விஎப்ஏ அணி, கண்ணுார் குளோபல் எப்சி அணி, ஈரோடு ஸ்ட்ரைக்கர்ஸ் எப்சி அணிகளும் வெற்றி பெற்றன.
கூடைப்பந்து போட்டியில் உடுமலை கூடைபந்து அகாடமி, திருப்பூர் கூடைபந்து கிளப், ஹாக்ஸ் கூடைபந்து அணிகளும் வெற்றி பெற்றன.
வாலிபால் போட்டியில் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி அணி, உடுக்கம்பாளையம் அரசு பள்ளி அணி, ஆர்.வி.ஜி., ஸ்போர்ட்ஸ் அகாடமி அணிகளும் வெற்றி பெற்றன.