/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வணிகர்களுக்கும் 45 நாள் 'பேமென்ட்' சட்டம் சாயம், கெமிக்கல் வியாபாரிகள் எதிர்பார்ப்பு
/
வணிகர்களுக்கும் 45 நாள் 'பேமென்ட்' சட்டம் சாயம், கெமிக்கல் வியாபாரிகள் எதிர்பார்ப்பு
வணிகர்களுக்கும் 45 நாள் 'பேமென்ட்' சட்டம் சாயம், கெமிக்கல் வியாபாரிகள் எதிர்பார்ப்பு
வணிகர்களுக்கும் 45 நாள் 'பேமென்ட்' சட்டம் சாயம், கெமிக்கல் வியாபாரிகள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 29, 2024 01:55 AM
திருப்பூர்: குறு, சிறு நிறுவனங்களுக்கு வழங்கியது போல், வணிகர்களுக்கும், 45 நாட்களுக்குள் 'பேமென்ட்' என்ற சட்டத்தை அமலாக்க வேண்டுமென, திருப்பூர் கெமிக்கல் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் சாயம் மற்றும் கெமிக்கல் வியாபாரிகள் சங்க மகாசபை கூட்டம் நேற்று நடந்தது. வாலிபாளையத்தில் உள்ள சங்கத்தின் கூட்ட அரங்கில், 36-வது மகாசபை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் நாகேஷ் தலைமை வகித்து கூட்டத்தை துவக்கி வைத்தார்.
செயலாளர் பொன் செந்தில்நாதன் ஆண்டறிக்கையை வாசித்தார். பொருளாளர் பாஸ்கரன் சங்கத்தின் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார். துணை தலைவர் கேசவன், இணை செயலாளர் ஸ்ரீதர், கௌரவ தலைவர் நாராயணசாமி உள்ளிட்டோர் பேசினர்.
எம்.எஸ்.எம்.இ., பதிவு பெற்ற நிறுவனங்கள், 45 நாட்களுக்குள் 'பேமென்ட்' என்ற சட்டத்தை, பதிவு பெற்ற வணிகர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். சாயம் மற்றும் கெமிக்கல் உற்பத்தியாளர்கள், கொள்முதலுக்கான தவணை அவகாசத்தை குறைத்துவிட்டனர். இதனால், நமது வாடிக்கையாளர்களும், 45 நாட்களுக்குள் தொகையை செலுத்தி ஒத்துழைப்பு அளிக்க கோரிக்கை வைப்பது.
கடந்த ஆக., மாதம் 17 மற்றும் 18 ம் தேதிகளில், தமிழ்நாடு சாயம் மற்றும் கெமிக்கல் வியாபாரிகள் சங்க மாநாட்டை சிறப்பாக நடத்திய நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
------------------------------
சாயம் மற்றும் கெமிக்கல்ஸ் வியாபாரிகள் சங்க மகாசபை கூட்டத்தில், சங்க தலைவர் நாகேஷ் பேசினார். அருகில் நிர்வாகிகள். கூட்டத்தில், பங்கேற்ற சங்க உறுப்பினர்கள்.