தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தபால் ஓட்டு எண்ணுவதற்கு பெட்டிகள் தயார்   

தபால் ஓட்டு எண்ணுவதற்கு பெட்டிகள் தயார்   

தபால் ஓட்டு எண்ணுவதற்கு பெட்டிகள் தயார்   


UPDATED : மே 01, 2026 03:24 AM

ADDED : ஏப் 30, 2026 11:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 01, 2026 03:24 AM ADDED : ஏப் 30, 2026 11:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், எல்.ஆர்.ஜி. கல்லுாரி வளாகத்தில் தொகுதிவாரியாகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வரும் 4-ம் தேதி காலை 8:00 மணிக்கு எண்ணிக்கை துவங்குகிறது. இதற்காக அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்களின் ஏஜென்ட்கள் காலை 7:00 மணிக்கே தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் பூத்வாரியாக, சுற்று வாரியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தபால் ஓட்டு எண்ணிக்கை:

முதற்கட்டமாகத் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். இதற்காகத் தனியாக மேஜைகள் அமைக்கப்பட்டு, உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே ஓட்டுகள் எண்ணிக்கைக்கு ஏற்கப்படும். தபால் ஓட்டுகளை வேட்பாளர் வாரியாகப் பிரித்துப் போடுவதற்காக, சின்னங்கள் ஒட்டப்பட்ட பிரத்யேக மரப்பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. தற்போது கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த மரப்பெட்டிகள், எண்ணிக்கை நாளன்று மையத்திற்குக் கொண்டு செல்லப்படும்.

---

கலெக்டர் அலுவலகத்தில், தபால் ஓட்டு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்படும் பெட்டிகள் தயாராக உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us