/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
4வது திட்ட குடிநீர் இன்று நிறுத்தம்
/
4வது திட்ட குடிநீர் இன்று நிறுத்தம்
ADDED : அக் 30, 2025 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி, 4வது குடிநீர் திட்டத்திலிருந்து மாநகருக்கு குடிநீர் பெறப்பட்டு வருகிறது. மின் வாரியத்தினர் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மேட்டுப்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இதனால், இத்திட்டத்தின் பம்புசெட்கள் நிறுத்தப்படுவதால் குடிநீர் பெறப்படுவது மாநகரில் தடைபடும். பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துமாறும், மேலும், வடகிழக்கு பருவமழை நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக, பவானி ஆற்றில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் குடிநீரினை, நான்கு காய்ச்சி பருக வேண்டும் என்றும் மாநகராட்சி கமிஷனர் அமித் தெரிவித்துள்ளார்.

