/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கட்டுமான பொருட்கள் திருட்டு 5 பேர் கைது; கார் பறிமுதல்
/
கட்டுமான பொருட்கள் திருட்டு 5 பேர் கைது; கார் பறிமுதல்
கட்டுமான பொருட்கள் திருட்டு 5 பேர் கைது; கார் பறிமுதல்
கட்டுமான பொருட்கள் திருட்டு 5 பேர் கைது; கார் பறிமுதல்
ADDED : பிப் 05, 2025 11:10 PM
அனுப்பர்பாளையம்,: பெருமாநல்லுார் அருகே அனுப்பர்பாளையத்தில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனம் சார்பில் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
கட்டடம் கட்டுமிடத்தில் வைக்கப்பட்டிருந்த, 24 காயில் கொண்ட காப்பர் ஒயர், ஐந்து கிலோ பிராஸ் கிராண்ட் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து, கட்டட மேற்பார்வையாளர் அவிநாசி - ஆட்டையாம்பாளையம், பொன்னர் சங்கர் நகரை சேர்ந்த குமரேசன், 28, என்பவர் பெருமாநல்லுார் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். திருட்டில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பட்டுராஜா, ரவிச்சந்திரன், விக்னேஷ், அரவிந்த், சுப்பிரமணி ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். இதில் பட்டு ராஜா, கட்டுமான நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார்.
அவர் தனது நண்பர்கள் நான்கு பேரை வரவழைத்து காரில் பொருட்களை திருடி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
ஐந்து பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து,1.25 லட்சம் ரூபாய் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.