sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 கிராமம்தோறும் 5 ஆயிரம் பனை மரக்கன்று

/

 கிராமம்தோறும் 5 ஆயிரம் பனை மரக்கன்று

 கிராமம்தோறும் 5 ஆயிரம் பனை மரக்கன்று

 கிராமம்தோறும் 5 ஆயிரம் பனை மரக்கன்று


ADDED : டிச 07, 2025 06:57 AM

Google News

ADDED : டிச 07, 2025 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'க ற்பகத்தரு' என்று கூறப்படும் பனை மரங்களை கிராமங்கள் தோறும் நட்டு வளர்க்க, பல்லடம் 'வனம்' அமைப்பு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதன் செயலாளர் சுந்தரராஜ் கூறியதாவது:

ஒரு நாட்டின் பொருளாதாரம் உயர ஆரோக்கியமான சமுதாயம் உருவாக வேண்டும். ஆரோக்கியத்தை தருவது தான் பனைமரம். பனை மரத்தின் அனைத்து பாகங்களும் பலன் தருவதாலேயே இதை 'கற்பகத்தரு'என்கின்றனர்.

மனித குலத்துக்கு, 764 பலன்களை தரக்கூடியது. இதர மரங்களை ஒப்பிடுகையில், பராமரிப்பு செலவு என்பதே முற்றிலும் கிடையாது. தண்ணீர் தேவை மிகக் குறைவு. ஒருமுறை வளர்ந்து விட்டால், 120 ஆண்டுகளுக்கு பயன்தரக்கூடியது. உலக நாடுகளிலேயே சர்க்கரை நோய் அதிகம் உள்ள நாடு இந்தியா தான். இதில் மீள்வதற்கான வழிமுறை பனை மரத்தில்தான் உள்ளது.

பனை நாற்றுதொழில்நுட்பம் 'வனம்' அமைப்பு மூலம் பனை நாற்று தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. பனை விதைகள் நடும்போது, அவற்றில் பெரும்பாலானவை எலி, பெருக்கான் உள்ளிட்ட விலங்குகளால், விதைகள் சேதப்படுத்தப்பட்டு, வளராமல் போகின்றன. பனை நாற்றுகள் ஓரளவு வளர்ச்சி அடைந்த பின் நடப்படுவதால், எந்த இடையூறும் இன்றி அவற்றின் வளர்ச்சி உறுதி செய்யப்படுகின்றன.

சாதாரணமாக, 20 அடி உயரத்தில் தான் பனை மரங்களில் பாலை விடும். ஆனால், நாற்றாக இங்கு தயாரிக்கப்படும் பனை மரங்கள், 10 அடி உயரத்திலேயே பாலை விடும் என்பதால், இதை பராமரிப்பது எளிதானது. விதை நேர்த்தி செய்து, அவற்றை இரண்டு ஆண்டுகள் வளர்த்து பராமரித்த பின்னரே நடப்படுகின்றன.

தற்போது பருவமழை காலம் என்ப தால், நாற்றுகள் நடும்போது, நல்ல வளர்ச்சியை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, நுாற்றுக்கணக்கான பனை நாற்றுகளை நடவு செய்ய தயார்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு கிராமத்திலும், 5 ஆயிரம் மரங்களை நட்டு வளர்த்து விட வேண்டும் என்பதே எங்களின் இலக்கு.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us