/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
5,008 லட்டு பிரசாத பாக்கெட்: ஹிந்து மஹாசபா ஏற்பாடு
/
5,008 லட்டு பிரசாத பாக்கெட்: ஹிந்து மஹாசபா ஏற்பாடு
5,008 லட்டு பிரசாத பாக்கெட்: ஹிந்து மஹாசபா ஏற்பாடு
5,008 லட்டு பிரசாத பாக்கெட்: ஹிந்து மஹாசபா ஏற்பாடு
ADDED : ஜன 22, 2024 12:36 AM

திருப்பூர்:அகில பாரத ஹிந்து மஹாசபா திருப்பூர் மாவட்ட கிளை சார்பில், ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக தினமான இன்று, 5,008 பிரசாத பாக்கெட் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
இது குறித்து, மாநில இளைஞரணி செயலாளர் வல்லபை பாலா கூறியதாவது:
உலகமே திரும்பிப்பார்க்கும் வகையில், ராமர்கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஹிந்துக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் ஸ்ரீராமர் படம் வைத்து, விளக்கேற்றி வழிபடவேண்டும். திருக்கார்த்திகை தீபம்போல், எல்லா இடங்களிலும் அகல் விளக்குகள் ஒளிரவேண்டும். ஸ்ரீராமரின் தாரக மந்திரமான, 'ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெயராம' என்று, 108 முறை உச்சரிக்கவேண்டும்.
ஹிந்து மஹா சார்பில், 5,008 பிரசாத பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அயோத்தியில் கும்பாபிஷேகம் நிறைவடைந்தபின், நாளை (இன்று) மதியம் 1:00 மணி முதல், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.