/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி பெரிய கோவிலில் 500வது மாத உழவாரப்பணி
/
அவிநாசி பெரிய கோவிலில் 500வது மாத உழவாரப்பணி
ADDED : செப் 20, 2024 10:48 PM
அவிநாசி: விஜயமங்கலம் கொங்கு மண்டல அப்பரடிகள் சிவநெறி வழிபாட்டு திருக்கூட்டத்தின், 500வது மாத உழவாரப் பணிகள் நாளை அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெறுகிறது.
இது குறித்து, திருக்கூட்ட நிர்வாகிகள் கூறியதாவது: கொங்கு மண்டலம் உட்பட தமிழகம் முழுவதுமுள்ள சிவாலயங்களில், ஒவ்வொரு மாதமும் உழவாரப்பணி மேற்கொண்டு வருகிறோம். அவ்வகையில், 500வது மாத உழவாரப்பணி, 22ம் தேதி (நாளை) அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெறுகிறது.
அப்பரடிப்பொடி புலவர் சொக்கலிங்கம் முன்னிலையில், உழவாரப் பணிகள், காலை, 8:00 முதல், மதியம், 12 மணி வரை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து, ஆட்டையாம்பாளையம் அருகேயுள்ள செந்துார் மஹாலில் சிவாலய வழிபாடு மற்றும் சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்குதலும் நடைபெறும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.