ADDED : ஜூலை 20, 2025 11:20 PM
56 யூனிட் ரத்தம் தானம்
சிகரங்கள் அறக்கட்டளை சார்பில், 92வது ரத்ததான முகாம் திருப்பூர் வஞ்சிபாளையம் அரசு பள்ளியில் நேற்று நடந்தது. வஞ்சிபாளையம் நண்பர்கள் குழு அறக்கட்டளை மற்றும் ரோட்டரி திருப்பூர் வஞ்சிபாளையம் உடன் இணைந்து நடந்தது. திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சார்பில் பங்கேற்ற மருத்துவ குழுவுக்கு, 56 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது. ஐ பவுண்டேசன் சார்பில், இலவச கண் சிகிச்சை பரிசோதனையில், 165 பேர் மக்கள் பங்கேற்றனர். இதில், 10 பேர் இலவச அறுவை சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ரேவதி மெடிக்கல் சென்டர் சார்பில், பொது மருத்துவ முகாம் நடந்தது.
-------------------
கண் சிகிச்சை முகாம்
திருப்பூர் லயன்ஸ் சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, ஜெயின் பட்டன் ஹவுஸ் சார்பில், 780வது மாதாந்திர தொடர் இலவச கண் சிகிச்சை முகாம் திருப்பூர் லயன்ஸ் சங்கத்தில் நேற்று நடந்தது. 236 பேர் பங்கேற்றனர். அறுவை சிகிச்சைக்காக, 47 நபர்கள் பரிந்துரை செய்யப்பட்டனர்.

