/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொத்து வரி செலுத்தாத 568 இணைப்பு 'கட்'
/
சொத்து வரி செலுத்தாத 568 இணைப்பு 'கட்'
ADDED : மார் 19, 2025 11:48 PM
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி அறிக்கை:
பொதுமக்கள் சொத்து மற்றும் காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை மற்றும் திடக்கழிவு மேலாண்மை கட்டணம் மற்றும் குத்தகை இனங்கள் ஆகியவற்றுக்கான வரி மற்றும் கட்டண நிலுவை செலுத்த வசதிக்காக வாரநாட்கள், அனைத்து சனி, ஞாயிறு காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை மாநகராட்சி மைய அலுவலக கணிணி வரிவசூல் மையம், நான்கு மண்டல அலுவலகங்கள், செட்டிபாளையம், தொட்டி பாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை, குமரன் வணிக வளாகம், முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், மற்றும் பாண்டியன் நகர் ஆகிய கணிணி வரிவசூல் மையங்கள் செயல்படுகிறது.
பணமாகவோ அல்லது 'ஆணையாளர், திருப்பூர் மாநகராட்சி' என்ற பெயரில் காசோலை மூலமாகவே அல்லது 'ஜிபே', 'பேடிஎம்', 'போன்பே' உள்ளிட்ட ஆன்லைன் செயலி மூலமாகவும் பணம் செலுத்தும் வசதிகள் உள்ளது; முழு விபரம் அறிந்து கொண்டு பணம் செலுத்தலாம். திருப்பூர் மாநகராட்சியின் மொத்த சொத்துவரி நிலுவை மற்றும் 2024 - 2025 இரண்டாம் அரையாண்டு வரைக்கான சொத்துவரி, 167.33 கோடியில், 118.15 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
சொத்துவரி, குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ள கட்டடங்களில் குடிநீர் இணைப்பு மண்டலம் எண், 1 ல், 151, மண்டலம் எண் இரண்டு மற்றும் மூன்றில் முறையே, 93 மற்றும், 172, மண்டலம் எண், 4ல், 152 என மொத்தம், 568 இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. எனவே வரியினங்களை செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு, ஜப்தி முதலிய நடவடிக்கைகளை தவிர்க்கலாம் இவ்வாறு கூறியுள்ளார்.