/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலையில் 59 மி.மீ., மழை பதிவு: பிரதான ரோடுகளில் மழை நீர் தேக்கம்
/
உடுமலையில் 59 மி.மீ., மழை பதிவு: பிரதான ரோடுகளில் மழை நீர் தேக்கம்
உடுமலையில் 59 மி.மீ., மழை பதிவு: பிரதான ரோடுகளில் மழை நீர் தேக்கம்
உடுமலையில் 59 மி.மீ., மழை பதிவு: பிரதான ரோடுகளில் மழை நீர் தேக்கம்
ADDED : நவ 12, 2025 11:22 PM

உடுமலை: உடுமலை பகுதிகளில் விவசாயம் பிரதானமாக உள்ள நிலையில், வட கிழக்கு பருவ மழை, இயல்பை விட குறைந்து, வறட்சி நிலை காணப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் பரவலமாக கன மழை பெய்தது.
உடுமலையில், 59.4 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. அதே போல், வரதராஜபுரம், 28, பெதப்பம்பட்டி, 50, பூலாங்கிணர், 35, திருமூர்த்தி நகர், 30, நல்லாறு, 6 மி.மீ.,மழை பதிவாகியிருந்தது.
மேலும், மடத்துக்குளத்தில், 57, குமரலிங்கத்தில், 21, அமராவதி அணைப்பகுதியில், 19, திருமூர்த்தி அணைப்பகுதியில், 30 மி.மீ., மழையும் பதிவாகியிருந்தது. நீண்ட நாட்களுக்கு பின், மழை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்சியடைந்தனர். தொடர்ந்து வட கிழக்கு பருவ மழை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நகரில் பாதிப்பு உடுமலை நகரில், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால், பிரதான ரோடுகளான, பழநி ரோடு, தளி ரோடு, திருப்பூர் ரோடு, தாராபுரம் ரோடுகளில், சாக்கடை கழிவு நீருடன் மழை வெள்ள நீரும் கலந்து, ஓடியது.
இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை வரை மழை நீர் வடியாமல் குளம் போல் தேங்கியுள்ளது.
பிரதான ரோடுகளில் மழை பெய்யும் நேரத்தில், வெள்ள நீர் வடிய வழியின்றி, ரோட்டில் ஓடுவதால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, பிரதான ரோடுகளிலுள்ள மழை நீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றி, மழை நீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும்.

