ADDED : பிப் 24, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி:அவிநாசி அடுத்த அவிநாசிலிங்கம் பாளையம் பகுதியில் லோகநாதன், 38, முத்தாள், 60, ரங்காள், 65; அவிநாசிலிங்கம் பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 2 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி என ஆறு பேரை இரண்டு வெறி நாய்கள் துரத்தி கடித்தது.
சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவ மனைக்கு சென்றனர். லோகநாதன், முத்தாள் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.