ADDED : ஜூலை 04, 2025 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில்; வெள்ளகோவில் அடுத்த வேலப்பநாயக்கன்வலசு, குன்னிக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் சதாசிவம், 41. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் செய்கிறார்.
இவர் தனது தோட்டத்தில் 21 ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் தோட்டத்தில் உள்ள பட்டியில் அந்த ஆடுகளை அடைத்து வைத்து விட்டு சென்றார்.
நேற்று காலை சென்று பார்த்தபோது ஆடுகளை வெறி நாய்கள் கடித்து குதறியது தெரிந்தது. இதில் ஆறு ஆடுகள் அதே இடத்தில் இறந்து கிடந்தன. இது குறித்து வருவாய்த்துறை, கால்நடை மருத்துவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு 90 ஆயிரம் ரூபாய் இருக்கும். பலியான ஆடுகள் உடற்கூராய்வு செய்து, பாதுகாப்பாக அடக்கம் செய்யப்பட்டன.