ADDED : டிச 13, 2024 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூரில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, வாரத்தின், சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் வழக்கத்தை விட கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நடப்பு வாரம் இன்றும், நாளையும், 60 சிறப்பு பஸ்கள் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து, 30 பஸ்களும், புதிய பஸ் ஸ்டாண்ட், மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து தலா, 15 பத்து பஸ்களும் என, 60 சிறப்பு பஸ்கள் இயங்கும். திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடப்பதால், பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, திருவண்ணாமலைக்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.